Saturday, January 26, 2013

பட்டணத்துப் பிழைப்பு

இரும்பு விலங்குகள்
பிடித்து நின்று 
இரும்பு இருக்கைகள் 
இடித்து அமர்ந்து
இரும்புப் பெட்டிகள் 
பிதுங்கி வழிய 
இரும்புக் கோடுகள் 
இரண்டின் வழியே 
இன்பந் தேடி 
நகருது நகரம்.

கும்பினி வண்டி


கறுப்புத் தார்ச்சாலையில்
விரைந்தோடியது   
வெண்ணிற வெண்பா
ஒன்று..
எட்டு அடிகள் 
இயல்பாய் இருக்கையில்
இரண்டடி 
இடைச்செருகலாய்
நான்.

இலக்கணம் மாறுது

இந்த ஊரின் 
இங்கிதம் தெரியாமல் 
கதவின் 
ரேகை அறியா பாகத்தில் 
சிறுகை பதித்து
பிளந்து
அத்துமீறி முகம் நுழைத்து 
 புன்னகை காட்டிய 
இரண்டடிக் கவிதை ஒன்று..
இழுத்து வந்து 
அறிமுகம் செய்தது..
ஓராண்டாய்
அடுத்த வீட்டில் 
குடியிருக்கும் 
அதன் அம்மாவை.