எதிர் வரும் இளைய தலைமுறையிடம் தமிழினைச் சேர்ப்பிக்கும் ஊடகமாய்இணையம் இருக்கும் தருவாயில், இணைய மொழியாக்கம் மிகத் தேவையானஒன்றுதான்! ஆனால், அத்தகைய சேவையைச் செய்யும் பொருட்டுஇணையத்தில் களமிறங்கியிருக்கும் ஆர்வலர்களின் "இணையா மொழியாக்கம்" பற்றியே நான் பேசுகிறேன்.
அட! வாளை எடுத்தவனெல்லாம் போர்க்களம் புகுவது போல, இணையத்தினை பயன்படுத்துபவனெல்லாம் மொழியாக்கம்செய்கிறேன் பேர்வழி என்று தமிழைப் பாடாய்ப்படுத்துவதுதேதற்போதைய நிலை! பாவம், மெய்யாகவே தமிழ் 'வலை'யில் சிக்கித் தவிக்கிறது!
சமீப காலமாக, நான் "கூகள்" தமிழ் ஆர்வலனாகச் சேவை செய்கிறேன்! தமிழ்மொழியாக்கம் என்ற பெயரில் நம் மொழியை எவ்வாறெல்லாம் இழிவு படுத்தமுடியுமோ, அவ்வாறெல்லாம் படுத்துகின்றனர் சிலர்!
தங்களால் முடிந்ததைச் செய்யவொண்ணாமல், ஒரு சேவையைகேலிகூத்தாக்குபவர்கள் சிலர்தான் என்றாலும், மாசில்லாத பாலில் ஒரு துளி விஷம்!
சரி! இதைப் போன்ற மொழியாக்கங்களை ஆராய்ந்து, அனுமதிக்கும் ' நடுவர்'???... அவரைத்தான் நானும் தேடிகொண்டிருக்கிறேன்!
இதோ-
The "IM_FEELING_LUCKYTM" button automatically takes you to the first web page returned for your query.An "IM_FEELING_LUCKY" search means less time searching for web pages and more time looking at them.
என்பதற்கான மொழியாக்கம்-
"Adhirshtam En PakkamTM" amukkaan thanaagavey ungal theyduthalin mudal inaya pakkathirkku kondusellum."Adhirshtam En Pakkam" artham : kuraivaana neram inaya pakkathai theyduthalukku - athikamaana neram avaigalai paarpatharku.Adhirshtamaanavaraa? Theyduthalai thodangi, muyarchi seiyungal!
" அமுக்கான்" என்ற சொல்லைக் கண்டாலே எனக்குப் பற்றிக் கொண்டுவருகிறது! என்னய்யா மொழியாக்கம் இது! இதற்கு 'பட்டன்' என்றேஎழுதிவிடலாம்! என்றாலும், 'குமிழ்' என்ற வார்த்தை அழகாக இருக்கிறதே! ('குமிழ்' - 'நாப்' மற்றும் 'பட்டன்' ஆகிய இரண்டிற்கும் பொதுவானதே! வேறு, நல்லசொற்களும் வரவேற்கப்படுகின்றன!)
இந்தப் பிழைப்பில், " மொழியாக்க ஆர்வலர் குழு" என்று ஒரு பகுதி! நான் கேட்டஒரேயொரு கேள்விக்கு(யார் நடுவர்?) இன்னும் பதிலைக் காணோம்! பார்க்க...
http://groups.google.com/groups?start=50&hl=en&lr=&ie=UTF-8&group=google.public.translators&selm=706c53ed.0409110816.652fb22d%40posting.google.com
இன்னும் கொஞ்சம் உலாவியதில், "தமிழ் மொழியாக்க ஆர்வலர்களே! இங்கே வாருங்கள்!" என்ற அறைகூவலுடன் அழைக்கின்றது ஒரு மின்னஞ்சல்! பார்க்க...
http://groups.google.com/groups?q=tamil&hl=en&lr=&ie=UTF-8&group=google.public.translators&selm=a3873bbf.0408271030.35d9dd48%40posting.google.com&rnum=7
"அட! இங்கேயாவது தமிழர்கள் இணைந்தார்களே!" என்று ஆர்வமாக அங்கேசென்றால்..."த்சோ! த்சோ! மார்புச் சளி வந்தவனைப் போல்இழுத்துக்கொண்டிருக்கிறது இந்தக் குழு!"
எனக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது!
நண்பர்களே! நான் உங்களிடம் மன்றாடிக் கேட்டுக்கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்! நீங்களும் இம்மாதிரிமொழியாக்கத்தில் ஈடுபடுவதெல்லாம் இரண்டாம் பட்சம்! முதலில், தமிழ் கூறும் இணைய நல்லுகத்தால் வெறுத்துப் போயிருக்கும் எனக்குஆறுதலாய்ச் சில வார்த்தைகள்!...
:( யூனா
2 comments:
பட்டனுக்கு பொத்தான் நல்லா இருக்கே, எல்லாரும் பயன்படுத்துவதுதானே, அதை வெச்சா என்ன?
உங்களுடைய கருத்தை நான் வரவேற்கிறேன். ஒரு குழந்தை பேசப் பழகும்போது மழலையில் தானே பேசுகின்றது. அதுபோல இவர்களெல்லாம் (ஏன் நானும் தான்) இப்பொழுது தான் தமிழ் இணையத்திலே நுழைந்திருக்கிறார்கள். உங்களைப்போன்றவர்கள் தான் எடுத்துச்சொல்லி பிழையைத் திருத்த உதவ வேண்டும்
http://kirukalkal.blogspot.com
Post a Comment